June 7, 2021
தண்டோரா குழு
லக்ஷ்மி ரிங்க் டிரேவல்லர்ஸ் ( கோயம்புத்தூர் ) பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது , 1974 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட காலம் முதல் சுற்றுச்சூழல் பதுகாப்பினை தனது தலையய கடமையாகக் கொண்டு பல்வேறு வகையான சுற்றுப்புற பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறது . இன்று நிலவி வரும் அதிகமான தொழில் வளர்ச்சியாலும், டிஜிட்டல் மயமாக்கும் நமது முயற்ச்சியாலும், இந்த பூமி இழந்துவிட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பொருட்டும் ,நம்மைப்போன்று பல்லுயிர்களும் வாழ வளம் செய்ய நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக LRT நிறுவனம் பல்வேறு வகையான
முயற்ச்சிகலை செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக LRT – யின் மற்றுமொரு கிளை நிறுவனமான LEED மற்றும் தோட்டக்கலை குழு , நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பில் பங்கு வகிக்கி களவில் 20 அதற்கும் பட்ட நாடுகள் இன்றளவும் பயண்படுத்திவரும் அதிநவீன தொழில்நுட்பங்களான கழிவு நீர் சுத்திகரிப்பு , கரிம கழிவு மாற்றி , மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்ற மறு சுழற்சிக்கு தேவையான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வை வழங்குகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஜீன் – 5 ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில்
கொரோனா பரவல் அதிகம் பரவியிருக்கும் இந்த ஊரடங்கு காலத்திலும் சுமார் 100 பணியாளர்களை கானொளி வாயிலாக இனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை LRT நிறுவனம் நடத்தி முடித்திருக்கிறது .
LRT- யின் தலைமை நிர்வாக அதிகாரி சுஷாந்த குமார் பட்னாய்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு LRT – பணியளர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு நாம் கடைபிடிக்க வேண்டிய சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு முறைகள் பற்றி சிறப்புறை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக LRT- யின் அனைத்து கிளை நிறுவனங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.
நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த,தலைமை மனிதவள அதிகாரி மீனாக்ஷி சுந்தரம், குழு உறுப்பினர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியினை நிறைவு செய்தார் .