June 5, 2021
தண்டோரா குழு
கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக கவுண்டம்பாளையம் பகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்னும் ஆர் கிருஷ்ணன் தலைமையில் இன்று காலை கவுண்டம்பாளையம் பகுதிக்குடப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பட்டினை கவுண்டம்பாளையம் திமுக நிர்வாகி எஸ்.ஜே ஷரத் செய்திருந்தார்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் திமுக நிர்வாகி எஸ்.ஜே ஷரத் கூறுகையில்,
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் பகுதியில் வறுமைக்கு கீழ் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி என இதுவரை 25 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.
இன்று கவுண்டம்பாளையம் 5வது வட்டம் பகுதியில் 1000 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை மேற்கு மண்டல பொறுப்பாளர் பையாகவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். 5 நாட்களாக எங்கள் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.