• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்ன ?

June 5, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும். கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக்கடைகள் காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

இறைச்சிக் கடைகள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க