June 4, 2021
தண்டோரா குழு
ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிதியுதவி அமைச்சர் சக்ரபாணியிடம் வழங்கப்பட்டது.கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர்
கோவை புலியகுலத்தில் உள்ள சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட்டில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் மூலம் இணைந்து கொரானா நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மேலும் கொரானா நேயாளிகளுக்கு பெருமளவில் தேவையிருப்பதை அரிமா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மூலமும் கிரெடாய் மூலமும் அறிந்து கொண்டு அவர்கள் தங்களால் இயன்றவற்றை அளிக்க முன்வந்துள்ளனர்.
அவர்களது முயற்சியால் ரூ.17,10,000 இதற்காக சேகரித்துள்ளனர். இதைக் கொண்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தேவைப்படும் 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர். சமீபத்தில், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜன் நாயர், பொருளாளர் முத்துக்குமார், கோயம்புத்தூர் கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, துணைச் செயலர் எஸ்.ஆர். அரவிந்த் ஆகியோர் தமிழ்நாடு உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஆர். சக்கரபாணியை சந்தித்து நன்கொடைக்கான கடிதத்தையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.