June 4, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்று 2-வது அலையின் போது பெரும்பாலனவர்களுக்கு அதிகளவு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் அதிகளவு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கோவைக்கு மருத்துவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு வரப்ப டுகிறது. இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலத்தில் இருந்து 64.86 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்ட ரயில் இன்று காலை 9.30 மணிக்கு மதுக்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜன் லாரிகள் அந்தந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
“கோவைக்கு ஆறாவது முறையாக மருத்துவ ஆக்சிஜன் கொண்ட ரயில் இன்று வந்தது. இதுவரை கோவைக்கு ரயில் மூலம் 300 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வந்துள்ளது,” என்றார்.