• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்களில் சிகிச்சைக்கு செல்லக்கூடாது

June 3, 2021 தண்டோரா குழு

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மக்கள் பயனிக்கக்கூடிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் சிகிச்சைக்கு செல்லக்கூடாது என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாள்தோறும் பாதிக்கப்படுவோர்களின்எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. அதனை மேலும் குறைக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு உட்பட்டவர்களில் கொரோனா நோய்த்தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களால் வீடுதோறும் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால்பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வராமல் தங்களது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். அதே போல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் மாநகராட்சியால்செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை மையங்களை அதாவது டிரையாஜ் செண்டரை பயன்படுத்திக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்காக மாநகராட்சி மூலம் 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மாநகராட்சி மூலம் உடனடியாக அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக கார்
ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மேற்படி ஆம்புலன்ஸ்களை உடனடியாக
தொடர்புகொள்ள வேண்டியிருப்பின்
97505 54321 மற்றும் 0422-2302323 என்ற தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எவரும் பொது மக்கள் பயனிக்கக்கூடிய
வாகனங்களிலோ அல்லது இரு சக்கர வாகனங்களிலோ செல்லக்கூடாது
என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க