June 3, 2021
தண்டோரா குழு
கொரோனா நோய் தொற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டால் உயிரிழப்புகளை தடுக்க இயலும் என ஸ்நேகாராம் மருத்துவமனையின் மருத்துவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருவதோடு,குறைந்த வயதினரும் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை செல்வபுரம் சினேகாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிச்சாமி என்ற 95 வயது முதியவர் குணமடைந்து அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டினார்.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் விஸ்வநாதன் இன்று மாவட்ட ஆட்சித் பணிகளில் பணி செய்து ஓய்வு பெற்ற 94 வயது முதியவர் ஒருவருக்கு சிகிச்சைளித்து குணப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கொரானா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்கலாம். தமிழக அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிவர கையாண்டு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதாகவும் சரியான நேரத்தில் மருந்து வினியோகம் செய்து வரும் தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.