June 3, 2021
தண்டோரா குழு
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவரும் ஆன மறைந்த மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம்
76 ஆவது வட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பாக கழகக் கொடியை ஏற்றி ஏழை எளிய 500 நபர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், செல்வபுரம் பகுதி கழக பொறுப்பாளர் கேபிள் கேபிள் மணி,76 வது வட்ட செயலாளர் கோவை k.சிவா, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் Tps.ரவி,வட்டக் கழக பொறுப்பாளர் B.ராஜ்குமார்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் S. மின்னல் சிவா,பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் SS. விஜய்,வட்ட இளைஞரணி அமைப்பாளர் E.குணா மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.