June 3, 2021
தண்டோரா குழு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக, வெங்காயம், தக்காளி,கேரட் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும்,தி.மு.க.தலைவரும் ஆன மறைந்த மு.கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒண்றிணைவோம் எனும் திட்டத்தில் கழக தொண்டர்கள் உதவும் நோக்கில் செயல்பட முதல்வர் ஸ்டலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கோவை தியாகி குமரன் மொத்த காய்கனி மார்க்கெட் வியாபரிகள் சங்கம் சார்பாக வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகு,கேரட்,பீட்ரூட் என சுமார் பத்துக்கும் மேற்பட்ட காய்கறிகள் அடங்கிய 2500 தொகுப்புகள் வழங்கும் விழா டி.கே.மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதில்,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் கருதி,காய்கறி தொகுப்புகளை அந்தந்த பகுதிகளுக்கே சென்று வழங்க உள்ளதாக சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்செயலாளர் பாபு,சித்திக்,பதுரு, ஆஷிக் அலி,மற்றும் பெரியகடை வீதி பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மார்க்கெட் மனோகரன், முத்து முருகன்,மார்க்கெட் ராமு,சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.