• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிரிமியர் மில்ஸ் குழுமம் சார்பில் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் ஜெனேரட்டர், 100 படுக்கைகள் வழங்கல்

June 3, 2021 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தொற்று, கோவையை மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த சவாலான தருணத்தில், கோவை நகர மக்களுக்கு உதவிட பிரிமியர் மில்ஸ் குழுமம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து பிரிமியர் பைன் லினன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி ஸ்ரீனிவாசன் கூறியதாவது :

கோவை நகர மக்களுக்காகவும், இங்கு குடியிருப்போரின் நலனுக்காகவும் இ.எஸ்.ஐ., மருத்துவனைக்கு 100 படுக்கைகள் ஆக்சிஜன் பெறும்வகையில்,பிரிமியர் மில்ஸ் குழுமம் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் வசதியடன் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.இந்த மாடுலர் அமைப்பு, இரண்டு தனித்தனி கம்ப்ரஷர்களை கொண்டது.

இது, பரவலாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டியுடன் இணைக்கப்பட்டு,ஒரேசமயத்தில் இரண்டு நோயாளிகளின் படுக்கைகள் ஆக்சிஜன் வசதிபெறும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமுதாயத்திற்கு உதவவேண்டும் என்ற நோக்கில் நாங்கள், இந்த பொறுப்பினை மிக்க கவனமுடன் மேற்கொண்டு வருகிறோம்.மேலும் பல வழிகளில் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், கோவிட்சிகிச்சை மருத்துவமனைகள் போன்றவைகளுக்கும் மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகிறோம். எங்களது பிரிமீயர் மில்ஸ் குழுமம், கோவை நகருக்கும், மக்களுக்கும் தொடர்ந்து உதவிசெய்ய உறுதி பூண்டுள்ளது. “வாழ்வை காப்போம்” என்ற எங்களது உயரிய நோக்கத்தோடு பணியினை தொடர்வோம்.

மேலும் தங்களது குழுமம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்களது தொழிலாளர்களின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. என்பதையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க