June 3, 2021
தண்டோரா குழு
கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் 50 ஆண்டுகளாக கல்விச் சேவை செய்து வரும் பார்க் கல்வி குழுமம் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது வளாகங்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளார்கள்.
இது குறித்து பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், முனைவர். அனுஷா ரவி கூறுகையில்,
இந்த பேரிடர் காலத்தில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள போதிய வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக கருமத்தம்பட்டியில் உள்ள எங்களது கல்லூரி வளாகங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று 350 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் வளாகத்தில் அர.சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த விழாவில் கல்லூரி தலைவர் முனைவர். P.V. ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர், முனைவர். அனுஷா ரவி கலந்து கொண்டனர்.
மேலும், மக்களின் நலனுக்காக கணியூர் பேரூராட்சி மற்றும் மாதப்பூர் ஊராட்சி மக்களின் வசதிக்காக 30 படுக்கை வசதி கொண்ட இரண்டு மையங்களை கணியூர் பார்க் குளோபல் பள்ளி (CBSE) வளாகத்தில் அமைத்துள்ளதாக முனைவர். அனுஷா ரவி தெரிவித்தார்.