• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.எஸ்.ஐ.ஆலயம் மற்றும் ஜீவசாந்தி அறக்கட்டளை உதவி தொடர்பு மையம் துவக்கம்

June 2, 2021 தண்டோரா குழு

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதெற்கென கோவை சி.எஸ்.ஐ.ஆலயம் மற்றும் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பாக உதவி தொடர்பு மையம் துவங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,நோய் தொற்று பாதிப்பில் மாநிலத்திலேயே கோவை மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்துள்ள நிலையில்,இது போன்று நோய் தொற்று பாதித்தவர்களுக்கான உதவி தொடர்பு மையம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆரம்ப பள்ளியில் துவங்கப்பட்டது.

ஜீவசாந்தி அறக்கட்டளை மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பாக துவங்கப்பட்ட மையத்தை சகல ஆன்மாக்கள் ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் காலனி வினோத் ஆனந்த்,தளபதி மோசஸ்,பூர்ண சந்திரன்,மற்றும் பள்ளி தாளாளர் அருள் பிரபு,அறக்கட்டளை தலைவர் சலீம்,மற்றும் பிரவீன்,ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளும் நோயாளிகளுக்கு தேவையான உணவு வழங்க உள்ளதாகவும், மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள், அவசர தேவைக்கென பத்து ஆக்சிஜன் செறிவூட்டிகளும் உள்ளதாக சி.எஸ்.ஐ. ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க