• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கோவை இ.எஸ்.ஐ., டீன்

June 2, 2021 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ., டீன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியான பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு தெரிவித்து டீன் ரவீந்திரன் விளக்கம் அளித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன்,

30 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஊட்டியில் பணி உயர்வு பெற்று பணியாற்றி, பின்பு, பணி மாறுதலாகி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறேன். நான் வந்த பிறகு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 140 ஆக குறைந்துள்ளது. 530 ஆக இருந்த படுக்கை வசதிகளை ஆயிரத்து 250 படுக்கைகளாக 90 நாட்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியினார்.

மேலும், உயிரை கொடுத்து சொந்த மருத்துவமனை போல் நினைத்து பணியாற்றி வருவதாகவும், அவ்வாறு இருக்கும்போது, குறிப்பிட்ட பத்திரிக்கை ஒரு குற்றச்சாட்டு வெளியிடுவதாகவும், எதுவாக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்போம் என்றார். அதில், சடலத்தை எடுக்க ரூ.3 ஆயிரம் கேட்பதாக தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்னரிமை அடிப்படையில் பணி பெற்றபோது, முன்னாள் அமைச்சர் தயவால் பணி ஆணை பெற்றதாக செய்தி வெளியிட்டது மன வேதனை அடைந்ததால் இந்த விளக்கம் அளிக்கிறேன்.

இதுதொடர்பாக பிரஸ் கவுன்சில் செல்ல உள்ளேன் என்றவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் PAID ATTENDERS அல்லது HOME NURSE முறை உரிய அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுவதாகவும், ஆள் பற்றாக்குறையால் தான் இது அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க