June 1, 2021
தண்டோரா குழு
ஆணைகட்டி கட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியமித்து,படுகக்கை வசதியோடு சிகிச்சை அளிக்க பழங்குயினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலேயே கோவையில்தான் அதிகளவில் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் வீரபாண்டி கிராமம் பகுதியில் பெரிய ஜம்புகண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை நம்பியுள்ள 13000 மக்களில் 11000 பேர் மலைவாழ் மக்கள். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் , இங்குள்ள கர்ப்பிணி பெண்கள் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 5 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, வெண்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கை மற்றும் பிரசவம் பார்க்க புதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு நியமிக்க வேண்டும். 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் இம்மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் அனைத்து வசதிகளுடன் இருந்த அவசர ஊர்தியை பொள்ளாச்சிக்கு மாற்றிவிட்டு சிறிய அவசர ஊர்தியை தற்போது கொடுத்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு தேவையான அவசர சிகிச்சைகள் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 36 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.
கொரொனா தவிர பெரும்பாலான சிகிச்சைகளுக்கு இந்த மருத்துவமனையை நம்பி இருக்கும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் என்ன செய்யப்போகிறது என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.இழப்பு ஏற்படு முன் நடவடிக்கை தேவை.