June 1, 2021
தண்டோரா குழு
கோவையில் கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி ஆணையாளர் அனுமதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் குமார்வேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமாரிப்புத்துறை, அரசு முதன்மை செயலாளரின் கடிதம் படி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களை மாநகராட்சி பகுதியில் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.