May 31, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 16வது மற்றும் 17வது வார்டு பகுதிகளான வடவள்ளி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் ஆகியவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணிகளும் நடைபெற்றது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில், கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் அந்தந்த பகுதிகளுக்கு காய்கறிகள் பிரித்து அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருவதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை கமிஷனர்மதுராந்தகி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.