May 31, 2021
தண்டோரா குழு
ஒவ்வொரு ஆண்டும் மே 31 – ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2021 கொடாடப்படுகிறது.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புகையிலை பயன்பாட்டின் ஆபத்தை பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியாக நிறுவனங்கள் இவற்றை செய்து வந்தாலும், உலக சுகாதார நிறுவனம் புகையிலை நோய் தொற்றை எதிர்த்து போராடி வருகிறது. உலகில் உள்ள மக்கள், தங்களது சுகாதாரமாக வாழும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், எதிர் கால சந்ததியினரையும் பாதுகாக்க வேண்டும்.
புகையிலையால் ஏற்படும் நோய் தொற்றையும், அதன்காரணமாக நிகழும் இறப்பையும் தடுக்க முடியும் என்பதை உலகின் கவனத்துக் கொண்டுவர உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்புநாடுகள் 1987ம் ஆண்டில், உலக புகையிலை இல்லா நாளை உருவாக்கியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் கூறியதாவது:
இந்த ஆண்டின் கருத்தாக “கைவிட உறுதி” உள்ளது. புகையிலையை கைவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் ஒரு அங்கமான ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், ஒரு புதுமையான யோசனையை உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வாழும் இளைஞர்களிடையே அதிகபட்ச விழிப்புணர்வு தளத்தை உருவாக்கியுள்ளது.
எங்களது மையம், புகையிலை மட்டுமின்றி அது தொடர்பாக வரும் புற்றுநோய், கொரோனா தொற்று நோய் 19 உள்ளிட்ட விழிப்புணர்வு தர, செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) அடிப்படையாக கொண்ட வாட்ஸ் ஆப் பாட் ஒன்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் வடிவமைத்துள்ளோம். கடினமானதாக தோன்றினாலும், இதன் பயன்பாடு எளிதானது. இதில், 916364578269 என்ற எண்ணை சேமித்துக் கொண்டு, வாட்ஸ் ஆப் பில் ஹி (HI) எனஅனுப்பினால் போதும். உங்களுக்கு பாட் ஆனது, தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களது விருப்ப மொழியை தேர்வு செய்தால், அந்த மொழியில், காரணிகளையும், அது தொடர்பான காணொளியையும் பெறலாம்.
இந்த பாட், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் 2021 மே 31 இன்று, பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில், மருத்துவமனை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார். டீன் சுகுமாறன், ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.