May 30, 2021
தண்டோரா குழு
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முதல்வர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கிராம புற கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொடிசியா, வேளாண் பல்கலை,பாரதியார் பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளது. சீனிவாசா கல்யாண மண்டபம், கொடிசியாவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ம் தேதி முதல் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.இதுவரை கோவையில் 5,85,713 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த பின் 1,51,061 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.கோவை உட்பட எல்லா இடங்களில் படுக்கை பற்றாகுறை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை புறக்கணிகப்பட்டதாக சிலர் சொல்கின்றனர்.அவர்களுக்கு அரசியல் ரீதியாக பதில் அளிக்க விரும்பவில்லை.அவர்கள் இந்த அரசு ஏற்படுத்தியுள்ள உட்பட்ட அமைப்புகளை பார்வையிட வேண்டும்.சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
எல்லா ஊரும் எங்க ஊர்தான் எந்த பாரபட்சமும் கிடையாது.கோவை புறக்கணிக்கப்படவில்லை. ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்ந்தே வேலைபார்க்கின்றொம். ஓட்டுப்போடாத மக்கள் வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும்.
தமிழகத்தை பாதுகாப்பதுதான் எங்கள் முதல் வேலை அனைத்து கட்சி கூட்டம் போட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேகதாது அணைகட்ட எந்த காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.