May 30, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்குணமடைந்து உள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணியில் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார்.சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன்முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் படி 94 வது மற்றும் 100 வார்டு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.