May 30, 2021
தண்டோரா குழு
இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முன்னதாக கோவை மாநகராட்சியில் தலா 10 கார் ஆம்புலன்சுகள் வீதம்,50 கார் ஆம்புலன்சுகளை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், ஏடிஜிபி தாமரை கண்ணன், காவல்துறை ஆணையாளர் பிரதீப் தாமோதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.