May 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து
வருகிறது. மாநிலத்தில் கோவையில் தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில்,கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக தேனி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக இருந்த செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் நாளை கோவைக்கு வரவுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.