• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சின்னவேடம்பட்டியில் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பில் புதிய மருத்துவமனை திறப்பு !

May 29, 2021 தண்டோரா குழு

கோவை சின்னவேடம்பட்டியில் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கோவை சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் சி.ஆர்.ஐ.அறக்கட்டளை சார்பில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனை நேற்று துவங்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவமனையை தமிழக உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் மாண்புமிகு ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

இந்த மருத்துவமனை பற்றி கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர் ஜி. சௌந்தரராஜன் கூறுகையில்,

சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் கோவை சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள 30,000 சதுர அடியில் உள்ள அலுவலக கட்டிடத்தை மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இங்கு சிறந்த காற்றோட்ட வசதி, தனிமையான சூழல், தொலை காட்சி பெட்டி, வை-பை வசதி, தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி, தகுதிவாய்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கொண்டு தரமான முறையில் சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

நோயாளிகளின் சௌகரியத்திற்காக நவீனரக மருத்துவப் படுக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்திலும் I.V. ஸ்டாண்டு பொருத்தப்பட்டுள்ளது.இங்கு 70 சதவீதம் படுக்கைகள் குழாய் வழி ஆக்சிஜன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிக கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களும் அவசர தேவைக்கு கையிருப்பில் உள்ளன. இந்த மருத்துவமனையை மேலும் விரிவு படுத்தி படுக்கை வசதிகளை அதிகரிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு நல்ல சத்தான மற்றும் ஆரோகியமான உணவு வழங்குவதற்காக பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி உணவு வகைகளைப் பட்டியலிட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு போன்ற வசதிகளும் உள்ளன.

இந்த சி.ஆர்.ஐ. அறக்கட்டளை மருத்துவமனை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட உள்ளது. அரசின் கொரோனாவை கட்டுப்படுத்தும்.அதி தீவிர நடவடிக்கைகளுக்கு இந்த மருத்துவமனை உறுதுணையாக அமையும் இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 3 கோடி செலவாகுமென மதிப்பிடப்படுகிறது. இந்த மருத்துவமனை குறித்த திட்டத்தை சி. ஆர். ஐ. நிறுவனத்தின் சார்பில் கடந்த 20.05.2021 அன்று தமிழக முதலமைச்சர் கோவை வந்திருந்த போது சமர்ப்பிக்கப்பட்டது.

விழாவில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன், கோயம்புத்தூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் பி. ஆர். ஜி. அருண்குமார், கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராமதுரை முருகன், கோவை கிழக்கு சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் நா. கார்த்திக் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
சி. ஆர். ஐ.நிறுவனம் ஏற்கனவே சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசு பள்ளிகளை தத்தெடுப்பது விவசாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சிறந்த விவசாய்களுக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல் மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையையும் வழங்கிவருகின்றது.

மேலும் படிக்க