May 28, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் கோவை மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலரும்,அரசு முதன்மை செயலாளர், வணிகவரித் துறை கமிஷனருமான எம்.ஏ.சித்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம்செய்யும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து காந்தி மாநகர் பகுதியில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும்
முறைகள் குறித்தும், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள் குறித்தும்,சுகாதார பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர்,காந்தி மாநகர்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையீட்டு ஆய்வு செய்து, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.
அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வசிப்பவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது தொடர்பாக கோவை மாநகராட்சியில் உள்ள 45 ஆசிரியர்களுக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் வடக்கு
மண்டல கமிஷனர் மகேஸ்கனகராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.