May 28, 2021
தண்டோரா குழு
டேன்ராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் தலைவர் டேன்ராம் வழிகாட்டுதலின் படி கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மதிய உணவு மற்றும் ஆக்சிஜன் செறிவுட்டிகள் வழங்கப்பட்டன.
தன்னார்வலர் டன்ராம் ஒரு சர்வதேச அளவிலான பேச்சாளர், நிகழ்ச்சியாளர், பயிற்சியாளர். பொரும்பாலும் பல ஆண்டுகளாக ஐரோப்பா, அமெரிக்கா,துபாய் போன்ற நாடுகளில் இருப்பார்.தொற்றின் ஆரம்ப காலத்தில் வெளிநாடு செல்ல இயலாமல், தனது பெற்றோருடன் இந்தியாவில் மாட்டிக் கொண்டார்.இவரது தந்தை ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி, அதோடு ஓய்வு பெற்ற மென்பொருளாரும் ஆவார்.இந்த தொற்று நோய் சூழலில் தங்களால் இயன்றதை ஏதாவது செய்ய வேண்டும் என டன்ராம் எண்ணினார். ஆரம்பத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 100 உணவுகளை வழங்கினார்.
ஒரு மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, ஆரம்ப நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 மருத்துவ உதவிகளை,அவர்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறும் வகையில் வழங்கினார். டான்ராமின் உதவி செயலாளர் ஜெஸ்ஸி ஜான் மற்றும் அவரது குடும்பத்தினரும் இணைந்து, ஓய்வின்றி பணியாற்றினர். மருத்துவ பொருட்கள், உணவு போன்றவைகளை
அவர்களது வீட்டிற்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று கடந்த ஒரு மாதகமாக வழங்கி வருகின்றனர்.
இந்த தகவல்களை சமுக ஊடகங்களில் பதவிட்ட டன்ராமுக்கு,சர்வதேச அளவிலிருந்து உதவிகள் வரத்தொடங்கின.கடந்த இரண்டு வாரங்களில் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் 200 உணவுகளை வழங்கி வருகின்றனர். நோயாளிகளுக்கு மருத்துவ உதவியளித்தல், ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவி செய்தல், இரண்டு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவுட்டிகளை வழங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம்,முகநூலில், லிங்க்டு இன் ஆகியவற்றில் @ iamdanram என்ற உள்ளீட்டில் தொடர்பு கொண்டு, பணிகளை பார்வையிட்டு உதவலாம். நன்கொடைகள், உதவிகள் அளிக்க www.iamdanram.com/indiacovidrelief என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.