• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை

May 28, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் சர்வேதச நிதி 60 லட்சம் பெற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஷ் நந்தா, செயலாளர் ரோஹிணி சர்மா மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் அபர்ணா சுன்கு ஆகியோர் கூறியதாவது :-

புற்றுநோய்க்கு எதிரான போர் திட்டத்தை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வேதச நிதியாக 60 லட்ச ரூபாயை பெற்று ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்மார்ட் சிட்டி உதவி வருகிறது. முதலாவது ஆண்டிலேயே இந்த நிதியை டிஆர்எப் தலைவர் டாக்டர் பரத் குப்தாவின் உதவியுடன் பெற்றுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ருபாய் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சுமார் 30 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். தேவையுள்ள மேலும் பல குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த வாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சுற்றுச் சுழலை மேம்படுத்தும் வகையிலான “நம்பிக்கை வனம்” இந்த ஆண்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

ஒரு கோடி ருபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தை, அமெரிக்காவின் நம்பிக்கை இல்லம் மற்றும் சிறுதுளியுடன் இணைந்து செயல்படுத்தப்படுத்தி வருகிறது.கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே 10 ஏக்கர் தரிசு நிலத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, தற்போது அவை வளர்ந்து வருவது மனதுக்கு இதமளிப்பதாக உள்ளது.

நேர்த்தியான பார்வை, என்ற திட்டத்தில், பார்வை குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தேவையான கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ரு.2 லட்சம் செலவில் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. ரொட்டி வங்கி, செப்டம்பர் 2020 ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், தினமும் 250 பேருக்கு உணவளித்து, கோவையில் உள்ள பலர் பசியாறி வருகின்றனர்.

தற்போதைய நோய் தொற்று பரவி பாதித்துவரும் இந்த சமயத்தில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு எங்களது திட்டத்தில் ரு.11 லட்சம் மதிப்புள்ள 65,000 உணவுகளை வழங்கியுள்ளோம்.தனிமைப்படுத்தட்டுள்ளோர், கோவிட் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கம், ஏழை குழந்தைகள், சாலையோரங்களில் உள்ள தாய் மற்றும் வயது வந்தோர் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் பணியாற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள், தங்களது உற்றார் உறவினர்களை கவனித்து வருவோருக்கு இந்த உணவு வழங்கப்பட்டன.

ஊரடங்கு சமயத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.4,250 மதிப்புள்ள 250 பேருக்கு என்ற உணவில் துவங்கிய திட்டம், மேலும் சிலரின் உதவியுடன் தற்போது ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு உணவு வழங்கி வருகிறது. ஆனால், இது மட்டும் போதாது. ஊரடங்கு மற்றும் சுழ்நிலை மேலும் மோசமாகி வருவதால், மேலும் பலருக்கு உணவு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரொட்டி கோயம்புத்தூர் திட்டத்துக்கு மேலும் பலரது நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். பிறந்த நாள் ஃ திருமண நாள் ஃ அன்பானவர்களின் நினைவு தினம் ஆகிய நாட்களில் நீங்கள் அளிக்கும் 2500 ருபாய் நன்கொடை, 100 பேருக்கு வயிறார உண்டு, வாயார வாழ்த்துவர்.

கோவையில் உள்ள 41 ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஜி41 என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. இந்த திட்டத்திற்கு 2.15 லட்ச ருபாய் நன்கொடை வழங்கி, அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் அலகு மற்றும் இஎஸ்ஐ மருத்துவ மனைகளுக்கு 1 ஆக்சிஜன் அலகை ஒரு கோடி ருபாய் செலவில் அமைக்க உதவியுள்ளது.

அன்னஷேத்ரம் என்ற அமைப்புக்கு, தொற்றல் இறந்தோரின் இறுதி சடங்கு, அடக்க செலவுகளுக்காக 70,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.இவை தவிர, கிருமிநாசினி, முககவசம், பாதுகாப்பு கவசம் போன்றவைகளையும் வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப், தடுப்பூசிக்கு முன் ரத்த தானம், தொற்றிலிருந்து மீண்டோரின் பிளாஸ்மா தானம் மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போன்ற பணிகளையும் செயல்படுத்தி வருகிறது. எங்களது தலைவர் ராஜேஷ் நந்தா, செயலாளர் ரோஹிணி சர்மா உள்ளிட்டோர் ரோட்டரி கிளப் உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளை ஏழை எளிய குழந்தைகள் கவனித்து பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் போன்கள், தொலைபேசி வசதிகள், கணிணி வசதிகளையும் அளித்துள்ளது. குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களது கல்வி கட்டணத்துக்காகவும் உதவிகளை அளித்த நிதின் ஷா மற்றும் நிடா ஷா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரொட்டி வங்கி மற்றும் ஆக்சிஜன் தேவைகளை நிறைவேற்ற எங்களுக்கு தாரளமாக நிதியுதவி வழங்கிட வேண்டுகிறோம். சர்வதேச ரோட்டரியின் இந்த ஆண்டின் பொருத்தமான வாசகமான, வாய்ப்புகளை ஏற்படுத்தும் ரோட்டரி என்பதற்கு ஏற்ப எங்களது 64 உறுப்பினர்கள் அனைவரும், அனைத்து இயன்ற வழிகளிலும் வாய்ப்புகளை உருவாக்கி உதவி வருகின்றனர்.
எங்களது சேவைகளையும் பணிகளையும் முக நூலில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி என்ற பக்கத்திலும், இன்ஸ்டாகிராமில் ரொட்டி பேங்க் சிபிஇ, ஹோப் வனம் புராஜெக்ட், ஆர்சிசி ஸ்மார்ட் சிட்டி பக்கத்திலும் காணலாம்.

இந்த பேருதவிகளை மாவட்ட கவர்னர் ஆர்ஐ 3201 ஜோஸ் சகோ, மாவட்ட இயக்குனர் எம்டி ஆர்எஸ் மாருதி, உதவி கவர்னர் விஎஸ் சுதாகர், ஜிஜிஆர் கிருஷன் சக் ஆகியோரின் ஆலோசனைகள், உதவியால் செயல்படுத்தி வருகிறோம். என்றார்கள்.

மேலும் படிக்க