• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடமாடும் காய்கறி வாகனங்களை கண்காணிக்க வார்டு வாரிய அலுவர்கள் நியமனம் – மாநகராட்சி கமிஷனர் தகவல்

May 27, 2021 தண்டோரா குழு

நடமாடும் காய்கறி வாகனங்களை கண்காணிக்க வார்டு வாரிய அலுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், மாநகராட்சி 100 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும்,சில்லறை வியாபாரிகளும் இந்த வியாபாரத்தில் ஈடுபடும் வகையில் 920 வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் காய்கறி விற்பனைக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்பணி சரியாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு வார்டுகளுக்கும் உரிய பொறுப்பு அலுவலர்களும், மண்டலத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மாநகராட்சி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாக காய்கறிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டாலோ, உடனடியாக வார்டு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

அதன்படி, கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர் மதுசூதனன் – 9894065592, மேற்கு மண்டலம் மேனகா குமாரி – 9894507629, தெற்கு மண்டலம் மணி – 9943997274, வடக்கு மண்டலம் கார்த்திகேயன் – 9786631660, மத்திய மண்டலம் ஆனந்தி – 9994056109 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் 100 வார்டு பொறுப்பு அலுவலர்களுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் மண்டல வாரியாக பல்பொருள் அங்காடிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியினையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க