• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரத்தில் கொரோணா பேரிடர் உதவி மையம் துவக்கம்

May 27, 2021 தண்டோரா குழு

கோவையில் தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை மாநகரின் பல பகுதிகளில் கொரானா பேரிடர் உதவி மையங்களை துவங்கி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல சேவைகளை செய்து வருகிறது.அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து கொரோணா பேரிடர் உதவி மையத்தை , காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்வினை கோவை பாராளுமன்ற உறுப்பினர் ,P.R. நடராஜன் துவக்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M. I. அப்துல் ஹக்கீம், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன்,பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர் A. அன்வர் உசேன், SDPI மாவட்ட தலைவர் K. ராஜா உசேன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர்கள், உபைதுர் ரஹ்மான் , முஜீபூர் ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உதவி எண்கள்.
99 525 79 108.,
994 07 66 109

மேலும் படிக்க