May 27, 2021
தண்டோரா குழு
கோவை கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவன் ஸ்ரீ. இவர்கோயிலுக்கு செல்ல சேர்த்த பணத்தை கொரணா நிவாரணத்துக்கு வழங்கினார்.
கோவை கே கே புதூர் ஸ்ரீ என்ற சிறுவன் பள்ளி படிப்பை படித்து வருகின்றான். கோயிலுக்கு செல்ல அவ்வப்போது ஸ்ரீ காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.சேர்த்து
வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில் கொரணா நோயாளிகளுக்கு நிவாரணம் தர முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததனை தொலைக்காட்சியினால் அந்த சிறுவன் அறிந்தான்.
இதையடுத்து,கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணத்தை நிவாரணமாக தர முடிவெடுத்தான்.அவர் தந்தையிடம் நிவாரண தர வேண்டுமென சொன்னதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஸ்ரீயின் ஆர்வத்தை அவர் தந்தை சொன்னார்.அதனை கேட்டவுடன் நாகராஜ் கோவை ஆட்சியர் பாராட்டினார். அச்சிறுவனின் சேவை குணம் பாராட்டும் படி அமைந்தன.