• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன- அதிகாரி தகவல்

May 27, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் தொற்று பாதித்தவர்களில் கோவை மாநகராட்சி பகுதியில் 72 சதவீதம் இருந்தனர். மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த தொற்று சதவீதம் தற்போது 54 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது.

அதே நேரத்தில் சூலூர் பகுதியில் தொற்று 11 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதுதவிர துடியலூர், பொள்ளாச்சி,அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து உள்ளது மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக வால்பாறையில் தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. மொத்த பாதிப்பில் தற்போது ஊரக பகுதி 50 சதவீதத்தை நெருங்கி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் ஊராட்சிக்கு ஒன்று வீதம் கொரோனா கண்காணிப்பு குழு அமைத்தும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த குழுவில் செவிலியர், ஊராட்சி தலைவர், செயலாளர், போலீசார் உள்ளிட்டோர் உள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 கொரோனா சிகிச்சை மையங்கள் வீதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 700 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த சிகிச்சை மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாருக்காவது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டால் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வைத்திருக்க உத்தரவிட்டு உள்ளோம். தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க