May 26, 2021
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்திள்ள நிலையில் கோவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நோயால் பாதிக்கப்படுவோர் போதிய படுக்கை வசதி இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி,கதிரி மில்ஸ் இணைந்து கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியண் ,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் சாரதா டெர்ரி மற்றும் குழுமங்களின் தலைமை மேலாண் இயக்குனர் கண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரன், சஞ்சனா விஜயகுமார், விக்ரம், கிருத்திகா விக்ரம், நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.