• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனிமைபடுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் முககவசத்துடன் வருவதால் அபராதம் விதிக்கப்படவில்லை – ஆணையர்

May 25, 2021 தண்டோரா குழு

கோவையில் தனிமைபடுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் முககவசத்துடன் வருவதால் அபராதம் விதிக்கப்படவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான 70 வாகனங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான 165 வாகனங்களில் காய்கறிகளை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல், மழுப்பலாக பதிலளித்தார். குறிப்பாக கொரானா தொற்று நடவடிக்கையாக மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடக்கவில்லை என்ற கேள்விக்கு, எங்கோ ஓரிடத்தில் அடித்ததாகவும், நானும் அதை கேள்விப்பட்டேன் என்றும் தெரிவித்தார்.

அதுபோல் கோவை மாவட்டத்தில் தனிமை படுத்தபட்ட வீடுகளில் இருப்பவர்கள் முககவசத்துடன் வெளியே வருவதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்று அபத்தமாக தெரிவித்தார். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராமல் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நோய்தொற்றை குறைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

அதுபோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அது மாநகராட்சிக்கு தெரியாது மாவட்ட ஆட்சியருடன் ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் தடுப்பூசி இல்லை என்ற அறிவிப்பால் மக்கள் தினமும் வந்து திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதை பற்றி கேட்டதற்கு, மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்க்காகவே இல்லை என்ற பெயர்பலகை வைத்துள்ளதாகவும்.அதனால் மக்கள் கூட்டம் அதிகரிக்காமல் எழுதிவைத்துள்ள பெயர் பலகையை பார்த்து திரும்பி செல்வார்கள் என்று தெரிவித்த ஆணையாளர் எப்போது தடுப்பூசி போடப்படும் என்றதை கூற மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க