ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய புதிய கோவிட் சிகிச்சை மையத்தை கோவை கிரெடாய் அமைப்பு அமைத்துள்ளது
கோவை மாநகரில் அதிகமாக பரவி வரும் கோவிட் தொற்றினால் பற்பல மக்கள் தொடர்ந்து கோவையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். இதை சாமாளிக்க வருவாய்த் துறை அலுவலர் அவர்கள் ஓர் கொரானா சிகிச்சை மையத்தை அமைத்து தருமாறு கிரெடாய் கோவை மையத்தை கேட்டுக் கொண்டார்.
அதன் படி கிரெடாய் கோவை மையம் வெகு விரைவாக செயல்பட்டு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கை வசதி கொண்ட ஒரு கொரானா சிகிச்சை மையத்தை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் அமைத்துள்ளது.
ஒவ்வொரு படுக்கைக்கும் இத்தகைய சிகிச்சை மயைங்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் மூலம் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பபட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். சுமார் ரூ.2 கோடி செலவில் அமைந்துள்ள இந்த சிகிச்சை மையத்தை நிறுவுவதற்கு கிரெடாய் கோவை அமைப்பிற்கு எக்சன் நிறுவனம் மற்றும் இதர நல்ல உள்ளங்கள் உதவியுள்ளனர்.
அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையம் கோவை அரசு மருத்துவமனையின் அருகில் இருப்பது மேலும் பயனள்ளதாக ஆக்குகிறது. இந்த சிகிச்சை மையத்தை இன்று மாலை, தமிழ்நாடு உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் மாண்புமிகு ஆர். சக்கரபாணி, தமிழக வனத்துறை அமைச்சர் கே. ராமசந்திரன், தமிழக கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் திமுக இளைஞர் செயலர் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கின்றார்கள்.
கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில்,
கிரெடாய் கோவை அமைப்பானது பற்பல சமூகத் தேவைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இத்தருணத்தில் மிகவும் தேவையான முழு ஆக்ஸிஜன் வசதி கொண்ட இந்த மையத்தை அமைத்துத் தருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தமிழக கிரெடாய் அமைப்பின் செயலர் டி. அபிஷேக், கல்லூரியில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சிகிச்சை மையத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார். சுரேந்தர் விட்டல், எஸ்.ஆர். அரவிந்த் குமார், ராஜீவ் ராமசாமி, மற்றும் கல்பேஷ் பாப்ஃ;னா ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த சிகிச்சை மையத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
கிரெடாய் அமைத்துள்ளது. இதற்கு சுமார் இந்த சிகிச்சை மையத்ததை ஏக்சன் & இதர நன்கொடையாளர்கள் உதவியுடனம் ரூ.2 கோடி செலவில் அமைத்துள்ளது. இதற்கு ஏக்சக் பெரிதும் உதவியுள்ளனர்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்