• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்கு, கிழக்கு மண்டலங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 21, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர்
குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உள்ள சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயானம், ஆத்துப்பாலம் மாநகராட்சி மின் மயானம், போத்தனூர் செட்டிபாளையம் ரோடு மாநகராட்சி மின் மயானம் ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்தும் கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிங்காநல்லூர் சாந்தி சோசியல் சர்வீஸ் மின் மயானம், நஞ்சுண்டாபுரம் ஈஷா மின் மயானம் ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மயானங்களில் உடல்களை காக்க வைக்கக்கூடாது, மயானங்களுக்கு வருபவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்த வேண்டும், மாநகராட்சி சார்பாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மட்டுமே பெற வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறை கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் ராஜா, தெற்கு மண்டல உதவி கமிஷனர்
சரவணன், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க