May 21, 2021
தண்டோரா குழு
எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமுமுகவினர் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான் அளித்துள்ள புகார் மனுவில்,
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பவர் நேற்றைய தினம் 20.05.21 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எங்களுடைய மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா Mla அவர்கள் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் அவர்களை கொலை செய்தவர் என்றும் கொலை செய்த அவர் இன்று பாபநாசம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் உண்மை செய்தி அல்ல அவை உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். இப்படிப்பட்ட செய்திகளை அவதூறு பரப்பி இதன் மூலம் தனது வன்மத்தை தீர்த்து மேலும் தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி அதன்மூலம் குளிர்காய நினைக்கும் இவரைப் போன்ற நபர்களைக் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆகவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.