• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஆர்.ஐ. டிரஸ்ட் சார்பில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை விரைவில் துவக்கம்

May 20, 2021 தண்டோரா குழு

கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட் மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

இதற்காக சுமார் 3 கோடி மதிப்பீட்டில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் C.R.I. Pumps நிறுவனத்தின் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தை கோவிட் சிகிச்சை மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைத்து சேவை செய்ய உள்ளது. இங்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தரமான முறையில் சிகிச்சை அளிக்க உள்ளது. இந்த C.R.I. அறக்கட்டளை மருத்துவமனை, கொரோனா சிகிச்சையை எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட உள்ளது.

அரசின் கொரோனாவை கட்டுப்படுத்தும் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு, இந்த எங்களது பங்களிப்பு உறுதுணையாக அமையும் என நம்புகிறோம்.இந்த திட்டம் குறித்த கடிதத்தை சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர்கலான G. சௌந்தரராஜன், மற்றும் G. செல்வராஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சரிடம் சமர்பித்தனர்.

சி.ஆர்.ஐ. நிறுவனம் சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசு பள்ளிகளை தத்தெடுப்பது, விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறந்த வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல், மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தையும் வழங்கிவருகிறது.

மேலும் படிக்க