• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 1,750 மது பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை – ஒருவர் கைது

May 20, 2021 தண்டோரா குழு

கோவை மற்றும் தமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இடையர்பாளையம் பகுதியில் வீட்டுப் பகுதியில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வீட்டில் 1,750 குவார்ட்டர் மதுட்டில்கள் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இடையர்பாளையம் கே.கே நகர் ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகேசன் 42, என்பவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 1, 750 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இவ்வளவு மதுபாட்டில்கள் எங்கிருந்து பெற்றார். இவருக்கு மது சப்ளை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவருடைய தொழில் காலி மது பாட்டில்களை சேகரித்து மதுபான தயாரிப்பு நிறுவனத்திற்கு மொத்தமாக வழங்குவது இவருடைய பணியாக உள்ளது.

மேலும் படிக்க