May 20, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே. குமரவேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனிமனித பிம்பத்தை சார்ந்திருக்கிற அரசியலைவிடவும் மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள அவர், தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவரது வழிநடத்தலுமே மட்டுமே காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., பத்மபிரியா, முருகானந்தம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.