• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

May 15, 2021 தண்டோரா குழு

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் கருத்துகள் பகிரபட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்,

தமிழகத்தில் நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருவதாகவும் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள்,ஆலோசனைகள் பகிரப்பட்டது எனவும் மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனவும் தெரிவித்தார்.

கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று வார் ரூம் தொடங்கப்படவுள்ளது என்று முதலமைச்சர் எங்களிடம் அறிவித்துள்ளார் என்றும் கூறினார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில்தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும்
ரெம்டெசிவிர் மருந்துகள் அரசுக்கு குறைவாகவே வருகிறது என்றுன் அதிகமான மருத்துவமனைகளும் அந்த மருந்தை பரிந்துரை செய்வதால் மக்கள் மருந்து விறனையாகும் மையங்களில் குவிந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் 18 வயது முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 45 கோடி மதிப்பீல் 15 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். கோவையில் படுக்கை வசதிகளைக் அதிகரித்து சித்தா ,ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி குறைந்த அளவில் ஆக்சிசன் பயன்படுத்தி நோயாளிகளைக் சிறப்பாக மருத்துவர்கள் குணமாக்கி வருகிறார்கள் அது பாராட்டுகுரியது என்றும் அரசு மருத்துவனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் வைக்க போதிய வசதி இல்லை என்று உணவுதுறை அமைச்சர் கூறினார்.அதனால் உடல்களைக் வைக்க கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை அரசு மருத்துவமனை முதல்வர், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அஇஅதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 13 அம்ச கோரிக்கை அடங்கிய மனு, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 8 அம்ச கோரிக்கை அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க