May 15, 2021
தண்டோரா குழு
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி மக்களின் வீடுகள் தொடர்ந்து பெய்த மழையால் சேதம், நிரந்தர வீடுகளை கட்டித் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கோவை மாவட்ட குழு தலைவர் பரமசுவம் கூறிக்கையில்,
நேற்று இரவு 10.30 மணி அளவில் பொள்ளாச்சி வனச்சரக திற்கு உட்பட்ட சின்னார்பதி வனகிராமத்தில் கடும் மழையாலும், பெருத்த சூறை காற்றாலும், மரங்கள் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் பழங்குடியின மக்கள் வீடுகள் மீது விழுந்துள்ளது. இதனால் சுமார் 8க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும்சேதமடைந்துள்ளது. மக்கள் எச்சரிக்கை உணர்வோடு நேற்று இரவு குடியிருப்பை விட்டு விலகி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தங்களது பாரம்பரிய இருப்பிட பகுதிகளில் பாறைகளில் தங்கியிருந்ததாக கூறுகிறார்கள்.
அதனால் இவ்விபத்தில் காயங்கள் இன்றி உயிர் இழப்புகள் இன்றி மக்கள் தப்பி இருக்கிறார்கள், உடனடியாக இம் மக்களை பாதுகாக்கும் விதத்தில் வருவாய்த் துறையினரும் வனத்துறையினரும் விரைந்து செயலாற்ற அன்புடன் வேண்டுகிறேன். நிரந்தரமாக இப்பகுதியில் பாதுகாப்பான கான்கிரீட் தொகுப்பு வீடுகளை அமைத்து தருவதற்கு போர்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டுமென வேண்டுகோள் வைப்பதோடு, தற்போது வீடுகளை இழந்து நிற்கும் மக்களுக்கும், எவ்வித வருமானமும் இன்றி இக்கட்டான இந்தக் கொடும் தொற்று காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் மக்களை பாதுகாத்திட தயவுகூர்ந்து செயலாற்ற வேண்டுமென தோழமையுடன் வேண்டுகிறேன் என்றார்.