• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆவின் பால் விற்பனையில் குறைபாடுகள் புகார் தெரிவிக்க டோல் ப்ரீ எண் வெளியீடு

May 14, 2021 தண்டோரா குழு

ஆவின் பால் விற்பனையில் குறைபாடுகள் புகார் தெரிவிக்க டோல் ப்ரீ எண் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்திரவு அடிப்படையில் 16ம் தேதி (நாளை )முதல் பால் நுகர்வோர்களின் நலன் கருதி ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விலைகுறைப்பு
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த விலைகுறைப்பு போக மேலும் சிறப்பு சலுகையாக அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலிருந்து நீல நிற பால்பாக்கெட்டுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 மற்றும் பிற நிற பால்பாக்கெட்டுகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரையில் அதிரடி விலை குறைப்பு செய்து
விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், பால் நுகர்வோர்கள் பால் அட்டை பெறுவதற்கு அலுவலகங்களுக்கு
வருவதை தவிர்த்து www.aavincoimbatore.com என்ற இணையதளம் மூலமாக பால் அட்டை
பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் குடும்ப திருமணம் மற்றும்
விஷேசங்களுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலையிலிருந்து மேலும் சிறப்பு சலுகையாக, கேன்களில் பால் வழங்கும் வகையில் 1000 லீட்டர் வரையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், 1000 லிட்டருக்கு மேல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50-ம் மேலும் விலை குறைப்பு செய்து தரப்பட்டுள்ளது.

மேற்படி குறைக்கப்பட்ட விலையில் பால் விற்பனை செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். கிழக்கு மண்டலம்-94890 43715, மேற்கு மண்டலம் 94890 43711, வடக்கு மண்டாம் 94890 43715,தெற்கு மண்டலம் 94890 43708 மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் டோல் ப்ரீ எண் 1800 4254 4777 ஆகியவற்றிக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க