• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனைக்கு “ஆல் தி சில்ரன்” அமைப்பு சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

May 14, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனைக்கு “ஆல் தி சில்ரன்” என்ற அமைப்பின் சார்பில் இலசவ கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றின் அலை தீவிரமடைந்துள்ளது, இதனை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர், இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், என அனைவரின் பணியும் அளப்பரியது, இவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், செவிலியர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் சென்னையை சேர்ந்த
“ஆல் தி சில்ரன்” என்ற அமைப்பின் சார்பில், 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள், மற்றும் வயதானவர்களுக்கு கல்வி, மருத்துவம், ஆகியவற்றை இலவசமாக வழங்கும் அறக்கட்டளையாக திகழ்ந்து வருகின்றது.

இந்த அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவமனை மயக்கவியல் துறையின் பேராசிரியர் மருத்துவர் கல்யாணசுந்தரம் முன்னிலையில் கோவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நிர்மலாவிடம், 200 ஆக்ஸிஜன் ஓட்ட மீட்டர்கள், 1500 மறு சுவாச முககவசங்கள், 500 சிபாப் மாஸ்க்குகள்,2500 ஆக்ஸிஜன் பேஸ் முககவசங்கள், மற்றும் 2500 சாதாரண முககவசங்கள் அடங்கிய தொகுப்பு, ருபாய், 10 லட்சத்திற்கான மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கபட்டது.

மேலும், அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனா தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மனம் கோனாமல் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்களையும் அரசு, வழங்க வேண்டும், அவர்களுக்கு தேவையான கையுறைகள், முககவசங்கள், சானிட்டைசர்கள் என அனைத்தும் தடையின்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களின் சேவையை போற்றும் விதமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக “ஆல் தி சில்ரன்” அமைப்பின் சார்பில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க