• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையம் அருகே உள்ள கடைகளில் ஆய்வு – ரூ.6 ஆயிரம் அபராதம் விதிப்பு

May 10, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை கடை, காய்கறி கடைகள் மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் மக்கள், வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் எஸ்.ஒ. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அரவிந்த் கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடைகளில் முகக்கவசம் அணியாமலும் ,சமூக இடைவெளியை பின் பற்றாமலும் மற்றும் கடையில் அமர்ந்து உணவருந்த அனுமதித்த 8 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகள் அரசு விதிமுறைகளை பின்பற்றுமாறும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க