• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

May 10, 2021

கேரளாவில் இன்றிலிருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவல் என்பது மிகக்கடுமையாக உள்ள நிலையில் அந்தத மாநில முதல்வர்கள் ஊரடங்கு மற்றும் பல்வேரு கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளனர். தற்போது தமிழ்நாடு,கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து வருவதன் காரணத்தால் கேரளாவில் இன்றிலிருந்து 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யபட்டதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி முழு சோதனைக்கு பின்னரே கேரளா செல்ல அனுமதிக்கின்றனர் கேரள காவல்துறையினர். இதில் தமிழக கேரள எல்லையான கோவை மாவட்டம் வாளையாறு பகுதியில் கேரள காவல்துறையினர் கேரளவிற்கு செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை மற்றும் ஆவணம் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் கேரள செல்ல ஈ பாஸ் பெற்று இருக்கும் வாகனங்கள் அனுமதிக்கபட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களான காயகறிகள், பால், பெட்ரோலியம், கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கபட்டது. அனுமதி இல்லாமல் கோவையிலிருந்து கேரளா செல்வோரை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறையினர் அவர்களை ஊரடங்கு காரணம் காட்டி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாளையாறு காவல் நிலைய ஆய்வாளர் கூறும்போது,

கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளதாகவும், கோவையிலிருந்து பாலக்காடு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதாகவும் அனுமதி இல்லாமல் வருவோரை திருப்பி அனுப்புவதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க