May 9, 2021
தண்டோரா குழு
ஊரடங்கு காரணமாக மதுபானங்களை வாங்க குவிந்த மதுபிரியர்கள், வங்கி அட்டைகள் பயன்படுத்த முடியாததால், ஏ டி எம் வாசலில் வரிசையில் நின்று பணம் எடுத்துவிட்டு மதுபானம் வாங்குகின்றனர்.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நாளை முதல் 24 ஆம் தேதி வரை அமுலுக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இருவாரங்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள எலைட் மதுபான கடையில் , வெளி நாட்டு மது வகைகளை வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
கொரொனா தொற்று காரணமாக ஒரே நேரத்தில் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மதுபிரியர்களிடம் பணம் மட்டுமே வாங்கப்படுவதால்,வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாமல்,வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் ஏ டி எம் மில் கூட்டமாக வரிசையில் நின்று பணம் எடுத்து , மது வாங்குகின்றனர்.
வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதை போல,மதுபானங்களை மதுபிரியர்கள் அள்ளிச்செல்கின்றனர். மதுபானம் வாங்க நீண்ட வரிசையில் மணிகனக்கில் காத்திருக்கும் குடிமகன்கள்,யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.