• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷா சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவச யோகா வகுப்பு

May 8, 2021 தண்டோரா குழு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்று பயன்பெறலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த இக்கட்டான சூழலில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா சிறந்த கருவியாக இருப்பதை உலக அளவில் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காலத்தில் சத்குரு சில பிரத்யேக யோகா பயிற்சிகளை வடிவமைத்துள்ளார். அவரின் வழிகாட்டுதல் படி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிக்கும் விதமாக ‘சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் விதமாக ‘சஷ்டாங்கா’ என்ற பயிற்சியும் பொது மக்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உணவு முறை பற்றிய குறிப்புகளும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இவ்வகுப்புகள் மே 31-ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஆன்லைனில் நடத்தப்படும். தமிழில் சுமார் 40 நிமிடங்கள் நடக்கும் இவ்வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படியே பங்கேற்கலாம். வகுப்பில் பங்கேற்க isha.co/DailyYoga என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

மேலும் படிக்க