May 8, 2021
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவர் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.தேவைப்படுவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.
ஆவணங்கள் என்ன வேண்டும்?
ஆர்.டி.பி.சி.ஆர் ( கொரோனா பரிசோதனை ரிப்போர்ட்)
சிடி ஸ்கேன் ரிப்போர்ட்
மருத்துவரின் பரிந்துரை (அசல்)
நோயாளிகளின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)
மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)