May 7, 2021
தண்டோரா குழு
மாநில அரசு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க தமிழக முதல்வருக்கு காட்மா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் (காட்மா) சங்க தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும். மேலும், தொழில் முனைவோர்களை மிக கடுமையாக பாதிக்கும் மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி மூலப்பொருள் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இது போன்ற தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தொழில் மற்றும் தொழில்முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என தொழில்முனைவோர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.