May 6, 2021
தண்டோரா குழு
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மையத்தை தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் பயணிகள் நின்றபடி பயணம் செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முககவசம் அணிவது தனிமனித இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும், மேலும் பேருந்துகளில் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளதாகவும் கொரோனா அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளதாக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இதே போல தமிழகம் முழுவதும் அத்தியாவசிய மளிகை பொருட்கள், பலசரக்கு கடை, டீக்கடை, காயகறிக்கடை போன்ற கடைகள் மற்றுமே மதியம் 12 மணி வரை இயக்கப்படும் என அறிவித்ததை அடுத்து கோவையில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், அவினாசி சாலை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த துணிக்கடைகள், ஜுவல்லரி நிறுவனங்கள், எலட்ரிக் நிறுவனங்கள் பூட்டபட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பணை நிறுவனங்கள் அனைத்தும் பூட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.