May 5, 2021
தண்டோரா குழு
கோவை – கண்ணூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மே 6 முதல் மே 15 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ளதால் கோவை – கண்ணூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே 6 முதல் மே 15 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, கோவை – கண்ணூர் சிறப்பு ரயில் எண்06608 மற்றும் கண்ணூர் – கோவை சிறப்பு ரயில் எண் 06607 மே 6 முதல் மே 15 ஆண் தேதி வரை இயங்காது. முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.