May 3, 2021
தண்டோரா குழு
பெங்களூரு – கொல்கத்தா இடையேயான இன்று நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று
பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில்,
கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் இன்றைய போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.